கனேடிய மாணவர்களினால் மிகவும் நேசிக்கப்படும் இலங்கைத் தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு கற்பிப்பதற்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது. பிரபல இரசயானவியல் ஆசிரியரான திரு திருக்குமாரன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவருக்கு மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. கனடாவில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டியது…
பால்மாவின் இறக்குமதி விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒரு கிலோ பால் மா 2,545 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 600 ரூபாவினால் அதிகரித்துள்ளது. 400 கிராம் பால் மாவின் விலை 230 ரூபாவில் இருந்து 1,020…
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் பூம்புகார் கடல் மற்றும் மண்கும்பான் சாட்டி கடல் ஆகியவற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். அரியாலை பூம்புகார் கடலில் நீராடிய ஞானகாந்தன் ஜெயமதன் (வயது 36)…
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்மொழி 28 ஆவது பொதுத்தேர்வு சுவிற்சர்லாந்தில் நாடுதழுவிய ரீதியில் 61 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இப்பொதுத்தேர்வானது (08) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும்…
மீசாலை தட்டான்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பூசகரின் பணப் பையை பறித்துக்கொண்டு இளைஞர்கள் இருவர் தப்பி ஓடியுள்ளனர். மீசாலையில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றிற்கு நித்திய பூசையில் ஈடுபடும் பூசகர் மற்றுமோர் ஆலயத்திற்கும் தினப் பூசைக்காக சென்று வருவது வழமையாகும். இவ்வாறு பூசையில்…
இரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மண்ணெண்ணெய் வாங்குவதற்காக…
உறவுகள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.அன்னையை போற்றுவோம்அன்னையை வணங்குவோம்.அன்னையை மதிப்போம்.இன்நாளில் அனைத்து அன்னையர்களுக்கும் சிறுப்பிட்டி இணையத்தின் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
ஆஸ்திரேலியாவில் அகதிகள் உள்பட 12 பேரின் விசா ரத்து: போராட்டத்திற்கு இடையில் கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்கு இடமாற்றம் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியில் உள்ள குடிவரவு தடுப்பு முகாமிலிருந்த அகதிகள் உள்ளிட்ட 12 பேரை ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்புக்கு வெளியே உள்ள கிறிஸ்தும்ஸ் தீவுக்கு…
நான்காவது கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நான்காவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இவர்களைத் தவிர 20 முதல் 60…
சமூக மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், மதுபானம் போதைப்பொருள் பாவனைகளால் தாமாக நோயேற்படுத்தும் தன்மையைத் தவிர்த்து சுகாதார சேவைக்கு ஒத்துழைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு…
யாழ்ப்பாணம் -தெல்லிப்பழை – வித்தகபுரம் பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியிடம் கொள்ளையிடுவதற்காக சென்றிருந்த சிலர், தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த மூதாட்டி தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக…