மின் கட்டணம் அதிகரிப்பு? வெளியான தகவல்
இனி வரும் காலங்களில் மாதாந்த மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் அழைப்பாளர் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார். தனியார் துறையிடம் இருந்து 300 மெகாவோட் மின்சாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் முயல்வதாக சுட்டிக்காட்டினார்.…
திடீரென அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை!
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.…
வயலில் வேலை செய்த இளைஞன் திடீர் மரணம்
வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று பிற்பகல் வடமராட்சி பகுதியில் நடைபெற்றுள்ளது. கரணவாய் கலட்டி கீரிப்பல்லி பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரமூர்த்தி நிதர்சன் (வயது 26) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர்…
வீடுகளுக்கே தேடி வரும் பூஸ்டர் தடுப்பூசி.
வீடுகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடமாடும் வேலைத்திட்டத்தில், இராணுவ மற்றும் சுகாதாரத்துறை பிரதிநிதிகளின் குழுக்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை…
யாழ்.கோப்பாய் இராசபாதை வீதியில் தொடர் வழிப்பறி.ஒருவர் கைது
திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபரிகள் மற்றும் நுகர்வோர்களிடம் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி சந்தையில் வகுப்பு (மூடை தூக்குதல்)வேலை செய்து வரும் நபர் ஒருவர், வியாபரிகள் , நுகர்வோர்களிடம் உங்கள்…
திடீரென வந்த மின்சாரம்…தீப்பற்றி எரிந்த பழக்கடை
வவுனியாவில் திடீரென பழக்கடை ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. நேற்று (3) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குருமன்காடு சாந்தி கிளினிக் அருகாமையில் உள்ள பழக்கடை ஒன்றை அதன் உரிமையாளர் வியாபாரம் முடிந்து…
வெட்டுப்புள்ளிகள் இன்று நள்ளிரவு இணையத்தில்.
020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (03) நள்ளிரவு இணையத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் சுமார் 40,000 பேர் வரை பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக…
சாரதி அனுமதிப்பத்திரம் பெறவந்தவர்கள்! வெளியான தகவல்
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப்பிப்பதற்கும் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்த 1213 பேரில் 145 பேர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்தார். தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிக்கைகளினால் இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும்…
யாழ்.ஏழாலையில் வீடு முற்றுகை! 21 லட்சம் ரூபாய் பணத்துடன் ஒருவர் கைது!!
யாழ்.ஏழாலை – களவா ஓடை பகுதியில் சுமார் 80 லீற்றர் கசிப்பு மற்றம் 21 லட்சம் பணம் ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் கசிப்பு வியாபாரம் இடம்பெறுவதாக தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கசிந்த நிலையில், சம்பவ…
ஊர்காவற்றுறையில் கர்ப்பவதி பெண் கொலை. 5 வருடங்களின் பின் கைதான சந்தேகநபர்!
யாழ்.ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியில் கர்ப்பவதி பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கிளிநொச்சியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசேகரன் ஹம்சிகா என்ற 27 வயதான கர்ப்பவதி பெண் 2017ம் ஆண்டு…
வட்டுக்கோட்டையில் விபத்து: 4 வயது சிறுமி வைத்தியசாலையில்!
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (01-02-2022) சங்கரத்தை துணைவி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியின் கால் எலும்பு பாரிய அளவில்…