வட்டுக்கோட்டை பகுதியில் கண்டறியப்பட இருவரின் சடலங்கள்.
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு சடலங்களும் மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒருவர் 76 வயதுடைய எனவும்,…
உடுவில் பகுதியில் டெங்கு காய்ச்சலால் 5 வயது சிறுமி பலி !
யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 வயது சிறுமியொருவர் இன்று உயிரிழந்துள்ளார். உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா (வயது 5) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமிக்கு கடந்த 23 ஆம் திகதி முதல் காய்ச்சல் ஏற்பட்டிருந்ததுடன், நேற்றுமுன்தினம் கடுமையான…
யாழில் உயிரிழந்த விபத்தில் சிக்கிய பாடசாலை அதிபர்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த பாடசாலை அதிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் கந்தையா சத்தியசீலன் என்பவரே இன்று உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் மோட்டார்…
யாழில் 20 நாளில் 16 இலட்சம் லீட்டர் பெற்றோல் விநியோகம்!
யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒக்டேன்- 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அதேவேளை இக் கால பகுதியில் டீசல் 8 இலட்சத்து…
குருநாகலில் வீதியில் கவிழ்ந்த எரிபொருள் பவுசர்.
குருநாகலில் எரிபொருள் பவுசர் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற பவுசர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து ஏற்படும் போது பவுசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இதன்போது கசிந்து…
பலரின் பாராட்டை பெற்ற அச்சுவேலி எரிபொருள் நிலையம்
நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்ற நிலையில் யாழ் அச்சுவேலி எரிபொருள் நிலையத்தின் முன்மாதிரியன செயல்பாட்டுக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர். நாடளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி காரணமாக குறிப்பாக மோட்டார் சைக்கிளிற்கான பெற்றோலை பெற்றுக்…
யாழில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனின் மனைவி கைது!
யாழ்.நகர் மற்றம் நகரை அண்டிய பகுதிகளில் 6 வீடுகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைக்கு உடந்தை மற்றும் கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களிலேயே மனைவி கைது…
இலங்கையில் பலர் வேலையிழக்கும் அபாயம்?
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி பொதுமக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. அதேவேளை அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு எரிபொருள் தட்டுப்பாடு மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு போன்றவற்றினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர்…
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
மஹியங்கனை தம்பராவ குளத்தில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 45, 15 மற்றும் 10 வயதுடைய தந்தை மற்றும் அவரது இரு மகன்களாவர். ஹபரவெவ, கிரிமெடில்ல பிரதேசத்தில் வசிக்கும் இவர்கள் நேற்று பிற்பகல்…
வெளிநாடுகளுக்கு திருப்பிவிடப்படும் இலங்கை விமானங்கள்!
கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கான மாற்றுத் தீர்வாகவும் நடவடிக்கைகளுக்காகவும் விமான நிறுவனங்கள் சென்னை, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்படும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவிற்கு…
வெளியாகின 2020ம் ஆண்டு O/L பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள்.
2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 32,528 பேர் மீள் திருத்தத்துக்கு விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று பெறுபேறுகளை…