இலங்கையில் இன்றைய தினம் 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும்
இலங்கையில் இன்றைய தினமும் (28-06-2022) 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை மின்வெட்டு இடம்பெறும் பகுதிகள் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
யாழ்.அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம் .
விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த மண்ணெண்ணெய்யை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க இராணுவத்தினர் முயற்சித்தமையால் யாழ்.அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என பதிவுகளை முன்னெடுத்தனர். அதனை கேள்வியுற்று பலர் பதிவுகளை மேற்கொள்ள…
ஜீலை-10ம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை
எதிர்வரும் 10ம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணப் பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஜூலை-10ம் திகதி வரை மூடப்படுகின்றன. ஏனைய மாகாணங்களில் பாடசாலைகள் தொடர்பில் பாடசாலைகளின்…
நாட்டில் மீண்டும் பொது முடக்கம்? வெளியான அறிவிப்பு!
இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லையென தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் தற்போது 1,100 தொன் பெற்றோல் மற்றும்…
அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கடற்படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்திலேயே அதிகாலை வேளையில்…
யாழில் கவனம் ஈர்த்த முன்பள்ளி மாணவன்!
யாழில் சிறுவர் முன்பள்ளி ஒன்றில் விளையாட்டுப்போட்டியொன்றில் வினோத உடைப் போட்டியில் கலந்துகொண்ட மாணவச் சிறுவர் ஒருவரின் செயல் சமூகவலைத்தளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டுவதாக போட்டியில் பங்கேற்ற மாணவனின் செயல் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள…
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய தகவல்!
குறைந்த அளவிலான அரச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பிலான சுற்று நிரூபமொன்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய அத்தியாவசியமான குறைந்த அளவிலான அரச ஊழியர்களை மாத்திரம் நாளாந்த…
வீடொன்றில் தீ விபத்து. தாயும் தந்தையும் பலி: இரு மகள்கள் மருத்துவமனையில்
கஹதுடுவ – தொலேக்கடே சந்தியில் உள்ள மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் இரண்டு மகள்கள் தீப்பற்றி எரிந்துள்ளனர். நேற்று (25) இரவு 10 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலத்த…
அத்தியாவசிய உணவு மற்றும் பாண் விலை மீண்டும் உயரும் நிலை?
எரிபொருள் விலை உயர்வால், அத்தியாவசிய உணவு, போக்குவரத்து செலவு உட்பட அனைத்தும் மீண்டும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பஸ் தொழிற்சங்கங்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. பாண் உட்பட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது !
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 10 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை மறைத்து வைத்து கடத்தி வந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய வர்த்தக…
பளையில் பெற்றோல் என கூறி சிறுநீரை விற்றவர் கைது.
பளைப் பகுதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்துக்கு அருகில் வரிசையில் நின்றவரிடம் ஒருவர் பெற்றோல் விற்பனைக்கு உள்ளதாகக் கூறி 1000 ரூபாவுக்கு சிறுநீரை கொடுத்து ஏமாற்றிய போது பிடிபட்டுள்ளார். குறித்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றார்கள்.