50,000 ரூபாயை கடந்த சைக்கிள் விலை.
எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை மக்கள் அதிகளில் நாடுகின்றனர். மக்கள் சைக்கிள் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள நிலையில், அதன்…
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 7,500 ரூபா!
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 7,500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த கொடுப்பனவு இந்த மாதம் முதல் 06 மாத காலத்திற்கு குடும்பங்களுக்கு வழங்கப்படும்.இந்த கொடுப்பனவு மூலம் 3.2 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என…
கிளிநொச்சி குளம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!
கிளிநொச்சியில் உள்ள குளம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (30) மாலை கிளிநொச்சி அம்பாள்குளத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மாங்குளம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ரகு என்ற இளைஞர் என பொலிஸாரின்…
பளையில் பனை மரத்திலிருந்து விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு
பளை பகுதியில் பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் (28-06-2022) பளை – புலோப்பளை கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்…
அரச மற்றும் தனியார் வங்கிகளின் சேவை நேரத்தில் மாற்றம்.
அரச மற்றும் தனியார் வங்கிகள் தமது சேவை நேரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளன. எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய அரச மற்றும் தனியார் வங்கிகளில் வார நாட்களில் காலை 9 மணி…
ஏழாலை பகுதியில் தூக்கில் தொங்கிய 2 பிள்ளைகளின் தந்தை.
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பஜிபரன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயது இளைஞனே நைலேன் கயிற்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் கொழும்பில் அன்றாட வேலை…
யாழில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!
யாழ்ப்பணத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த 20 ஆம் திகதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயெ இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச, அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும்…
இலங்கையில் சடுதியாக குறைந்துள்ள காய்கறிகளின் விலை
எரிபொருள் நெருக்கடி காரணமாக வெளியிடங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் காய்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கையிருப்பில் உள்ள காய்கறிகளை பொருளாதார மையங்களுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகள் இல்லாததால், சில சமயங்களில் விளைநிலங்களில் காய்கறிகள் அழிக்கப்படுவதாகவும்…
இலங்கையில் 15 மணிநேர மின்வெட்டு எச்சரிக்கை.?
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
யாழ்ப்பாணத்திலும் ஒரே நாளில் கடவுச்சீட்டு! புதிய திட்டம் ஆரம்பம்
யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றில் கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு ஒருநாள் சேவை இது தொடர்பில் அவர்…
யாழ்.தெல்லிப்பழையில் பெண் தாதியிடம் திருடிய இளைஞன்.
யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பெண் தாதி ஒருவருடைய மோட்டார் சைக்கிளை உடைத்து 8500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த இளைஞன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் தாதி தனது மோட்டார் சைக்கிளை…