யாழ்.கந்தர்மடம் பகுதியில் ரயில் விபத்து! ஒருவர் உடல்சிதறி பலி
யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உடல்சிதறி உயிரிழந்துள்ளார். கந்தர்மடம் – ஆத்திசூடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மானிப்பாய், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகேந்திரராசா என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம்…
இன்று மதியம் 12.00 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்!
கொழும்பு மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
யாழில் மீண்டும் அதிகரிக்கும் கொராணா தொற்று
யாழில் நேற்றையதினம் இருவருக்கு கொராணா தொற்று உறுதியானதையடுத்து பொதுமக்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அல்லாரை மற்றும் கைதடிப் பகுதியிலேயே இவ்வாறு கொராணா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட நபர்களுக்கு…
கண்ணீர்புகை தாக்குதலில் இளைஞர் ஒருவர் பலி.
பிரதமர் செயல்கத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்பப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் கண்ணீர்புகை தாக்குதலால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது இன்றைய தினம் கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற…
நாடளாவிய ரீதியில் இன்று எரிபொருள் விநியோகம்!
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக தேவையான எரிபொருளினை பெற்றுக்கொள்வதில் பெரும் சவாலினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் அத்தியாவசிய சேவையினை தடையின்றி வழங்குவதற்கும் பொதுமக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கும் மக்களுக்கு குறைந்தளவிலான எரிபொருள் விநியோகமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்.மாவட்டத்தில்…
யாழில் தொடர் கொள்ளை! பத்து பேர் கைது.
கோப்பாய் பொலிஸ் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட முதன்மை சந்தேக நபர் மற்றும் நகை கடை உரிமையாளர், உடந்தையாக இருந்தவர்கள் என 10 பேர் யாழ்பபாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மே, ஜூன் மாதங்களில்…
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்.
அரச ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதாகவும், அதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையினால்…
யாழில் விசேட எரிபொருள் விநியோகம்! வெளியானது அறிவிப்பு
யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர், மற்றும் பிரதிநிதிகள் யாழ் மாவட்ட…
செவ்வாய்க்கிழமை 3 மணிநேர மின்வெட்டு.
இன்று செவ்வாய்க்கிழமை 3 மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,ST,U,V,W ஆகிய வலயங்களில், பகல் வேளைகளில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு வர்த்தக…
இலங்கையர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் ஆபத்து
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, போலி இணைப்புகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது தொடர்பான சம்பவங்கள் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவிற்கு (SLCERT) தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், எரிபொருளைப் பெறுவதற்கும், போலியான பதிவுச் செயல்பாட்டின் போது உங்களின் முக்கியமான…
ஒரு மூடை யூரியா உரம் 10,000 ரூபா!
இந்திய அரசினால் வழங்கப்படும் யூரியா உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு மூடை உரத்தினை 10,000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்திய கடன் வசதியின் கீழ்,…