சில நீர்த்தேக்கங்களின் திறக்கப்பட்டுள்ள வான் கதவுகள் !
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, லக்ஷபான உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் இந்த விடயத்தினைக்…
யாழில் இரவு நேர ரயில் சேவை?
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் காங்கேசன்துறை – கல்கிசை இடையே இரவு நேர தொடருந்து சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படும் சேவை ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு காங்கேசன்துறையிலிருந்து மீள கொழும்புக்கு…
2021 உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றை கல்வியமைச்சர் வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் 15 முதல் 30 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெற்று எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலை
வெற்று எரிவாயு சிலிண்டர்கலின் புதிய விலையினை லிட்ரோ நிறுவனம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. 2.5Kg சிலிண்டர் 7000 ரூபாய்க்கும் 5Kg சிலிண்டர் 11 000 ரூபாய்க்கும் 12.5Kg சிலிண்டர் 14000 ரூபாய்க்கும் 37.5Kg 35 000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மூவர்.
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில், வரி செலுத்தப்படாத 03 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் 39 ஐபோன் வகை கையடக்கத் தொலைபேசிகளுடன் இரு பெண்கள் உட்பட 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை டுபாயில் இருந்து வந்த…
வாகன விபத்து: இரு இளைஞர்கள் பலி.
தங்காலை, ஹேனகடுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தங்காலையிலிருந்து திஸ்ஸமஹாராம நோக்கி நேற்று இரவு (31) சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆலமரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தின் போது காரில்…
புலமைப்பரிசில் பரீட்சைக் காலம் நீடிப்பு.
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
வடமராட்சியில் 12 பேர் கைது
அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக பயணிக்க முயன்ற 12 பேர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 8 ஆண்களும்…
எதிர்வரும் இரு நாட்களுக்கு மின்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு!
நாட்டில் நாளை மற்றும் நாளை மறுதினம் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW…
யாழ் கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள்
யாழில் கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் பெருமளவான மீன்கள் கரையொதிங்கியுள்ளது. இந்நிகழ்வானது யாழ்ப்பாணம் தொண்டைமனாறு கடல் நீர் ஏரியில் இடம்பெற்றுள்ளது. இந்த மீன்கள் இறந்தது குறித்து இது வரை தெரியப்படாத நிலையில் சிலர் இது தான் காரணம் என சில…
தங்க விலையானது எதிர்வரும் ஆறு மாதங்களில் குறையும்.
தங்க விலையானது எதிர்வரும் ஆறு மாதங்களில் குறையும் என உலகத்தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகின் இரண்டாவது தங்க நுகர்வோர் நாடாக இருக்கும் இந்தியாவில் தங்கத்திற்கான விலை குறைந்தால் தங்க விலையில் பெரும் மாற்றம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தைக்கு வந்த…