யாழில் சாதனை படைத்த வவுனியா மாணவர்கள்!
யாழ்ப்பாணம் – கந்தர்மடம் சைவபிரகாச பாடசாலையில் இடம்பெற்றுள்ள பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட பளு தூக்கும் போட்டியில் வவுனியா – நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் பதக்கங்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 17க்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 49…
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பணத்தொகை அதிகரிப்பு!
வெளிநாடுகளில் இருந்து இலங்கை பணியாளர்கள் அனுப்பிய பணத்தொகை கடந்த மாதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலையில் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதன்படி, ஜனவரி-ஜூலை 2022க்கான மொத்த பெறுமதி 1,889.4 மில்லியன்…
யாழ் கந்தர்மடம் பகுதியில் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகுமார் சரவணபவன் என்கிற 32 வயதுடைய பட்டதாரி இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார். நேற்று(08) இரவு 9.40 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருநெல்வேலி பகுதிக்கு…
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது, பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப்…
யாழ். கோண்டாவிலில் வீடொன்றில் பட்டப்பகலில் திருட்டு
யாழ்ப்பாணம் மாவட்டம், கோண்டாவில் மேற்கு சைவப் பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் பட்டப்பகலில் வாழைக்குலை திருடப்பட்டுள்ளது. துவிச்சக்கரவண்டியில் வந்த இரு இளைஞர்கள் மதிலோரம் தொங்கிக் கொண்டிருந்த கப்பல் வாழைக்குலையை பட்டப்பகலில் மதிலில் ஏறி வெட்டி கட்டிக்கொண்டுபோகும் காட்சி கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.…
யாழில் மரத்திலிருந்து விழுந்து ஒருவர் மரணம்
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதி, மாதகல் பகுதியில் வசித்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் மரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த, இச்சம்பவம் குறித்து மேலும்…
வவுனியாவில் போதை ஊசியைப் பயன்படுத்தும் சிறுவர்கள் அதிகரிப்பு!
வவுனியாவில் அண்மைக்காலமாக சிறுவர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. இச்செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார், பெற்றோர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் முன்வர வேண்டும். மாணவர்கள் தவறான வழிகளில் சென்றால் அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் எனவே பெற்றோர்கள்…
வடமராட்சி பகுதியில் நூதன திருட்டு!!
யாழ்ப்பாணம், வடமராட்சி, மண்டிகைப் பகுதியில் மயக்க மருந்து கொடுத்து மயங்கி விழுந்த ஆண் ஒருவரின் மோதிரம் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு: பருத்தித்துறை ஆதார் வைத்தியசாலைக்கு முன்பாக வாடகைக்கு முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர்…
யாழில் இடம்பெறவிருந்த திருமணத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்.
யாழ்ப்பாணம் பந்தத்தரிப்பு பகுதியில் திருமண வீடொன்றுக்கு சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் உறவினர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திருமண மண்டபத்திற்கு மணமகளை ஏற்றிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. கார் சாலையை விட்டு விலகி…
யாழில் விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளின் சாரதி மதுபோதையில் இருந்ததால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில்…
மானிப்பாயில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம், மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம் வன்முறைக்கும்பல் ஒன்று அட்டகாசும் புரிந்துள்ளது . மானிப்பாய் கிறீன் மெமோறியல் வைத்தியசாலையின் பின்புற வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நான்கு உந்துருளிகளில் வருகைதந்த வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துமீறி வீட்டினுள் புகுந்து…