யாழ். தெல்லிப்பழை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் பலி!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேசத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கைச் சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். அம்பனை பிரதேசத்தில் உள்ள தனது…
கோண்டாவில் பகுதியில் புகையிரதம் மோதி ஒருவர் மரணம்
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்தானது இடம்பெற்றது. இந்த விபத்தில்…
வட்டி வீதம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்
இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்களை மாற்றாமல் அதே நிலையில் வைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நிலையான வைப்பு விகிதம் மற்றும்…
இன்று முதல் தொலைப்பேசிகளின் விலைகளும் உயர்வு!
தொலைபேசி நிறுவனங்கள் இன்று (5) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தை அதிகரித்துள்ளன. இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையால் தொலைபேசி கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த கட்டண உயர்வு குறித்த…
யாழில் கோர விபத்து. 22வயது இளைஞன் பலி.
கொட்டடி லைட் அண்ட் சந்திப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்!யாழ்ப்பாணம் கொட்டடி லைடன் சந்தி பகுதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து கொட்டடி நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து…
கொத்து ரொட்டி, சோற்று பார்சல் விலை அதிகரிப்பு!
கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ், சோற்றுப் பார்சல் ஆகியவற்றின் விலை, பத்து ரூபாவால் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அகில இலங்கை ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
யாழ்.அராலி பகுதியில் தங்க நகைகள் கொள்ளை!
யாழ்.அராலி பகுதியில் வீடொன்றை உடைத்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த சுமார் 6 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது வீட்டில் இருந்தவர்கள் மரணச்சடங்கு ஒன்றுக்கு சென்று விட்டு , வீடு திரும்பிய வேளை வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்ட…
இன்று முதல் எரிவாயு விலை குறைப்பு
இன்று (05) நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,280 ரூபாவாகும். 5 கிலோ எடையுள்ள…
கொடிகாமத்தில் அம்மி குழவி காலில் விழுந்து ஒருவர் பலி
கொடிகாமத்தில் அம்மி குழவி காலில் விழுந்து காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கிட்டிணன் தங்கலிங்கம் என்ற (வயது 48) வறணி வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த 5 பிள்ளையின் தந்தையே அம்மி குழவி காலில் விழுந்து காய்ச்சல் ஏற்பட்டதால் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த…
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!
எரிபொருள் முன்பணம் இன்று முதல் இரத்து செய்யப்படும் என பெற்றோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வாக்குறுதியை மீறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் இயக்கக் கட்டணத்தில் தங்களுக்கு…
மலையகத்தில் இடம்பெற்ற மண்சரிவில் பெண் ஒருவர் பலி!
நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக திம்புள்ள – பட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுன்ட்வெர்னன் உப பிரிவு தோட்டத்தில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி சம்பவம் இன்று (03.10.2022) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்…