• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழ். நல்லூர் கந்தனின் நெற்புதிர் அறுவடை விழா!

யாழ். நல்லூர் கந்தனின் நெற்புதிர் அறுவடை விழா!

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் சென்றனர்.…

புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து யாழிற்கு வந்த பொதியால் சிக்கிய நபர்

நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த 26 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதை வில்லைகளை சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு கைப்பற்றியுள்ளது. கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தை சென்றடைந்துள்ள பரிசுப்பொதியொன்றில் இருந்து குறித்த போதை வில்லைகள் நேற்று (15.01.22) கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர், பிரதி…

அம்பாறையில் கோர விபத்து! மூவர் பலி

அம்பாறை, எக்கலோயா பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரது சடலங்களும் அம்பாறை பொது வைத்தியசாலையிலும் ஒருவரின்…

யாழ்.வடமராட்சி கிழக்கில் சிறப்பாக இடம்பெற்ற பட்டப்போட்டி!

யாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில் முதல் தடவையாக பட்டப்போட்டி வெகு சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றது. நேற்று பிற்பகல் இந்த போட்டி இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மற்றும் பிரதேசத்திறக்கு வெளியே என 2 பிரிவுகளாக போட்டி இடம்பெற்றது. அருட்தந்தை வணக்கத்திற்க்குரிய…

நெடுந்தீவுவில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகளவிலான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக…

இளவாலையில் காணாமல் போனவர் சங்கானையில் சடலமாக மீட்பு!

இளவாலைப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நபர் சங்கானை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது விலை பகுதியிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார்.…

திருமண நிகழ்வில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து மரணம்

பாணத்துறை – கொரகான பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 13.01.2022 வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. வாதுவ – பொதுபிடி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய நிஷான் லக்ஷான்…

யாழ்.நல்லூரில் பல கலை நிகழ்வுகளுடன் பொங்கல் விழா!

யாழ்.நல்லூரில் கண்டிய நடத்துடன் பொங்கல் விழா இன்று நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பும் யாழ்.நண்பர்கள் அமைப்பும் இணைந்து இந்த பொங்கல் விழாவை நடத்தியிருந்தனர். இன்று காலை 10 மணியளவில் நல்லை ஆதின மண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்ற பொங்கல் விழாவுக்கு…

யாழ்.புத்தூர் பகுதியில் உழவு இயந்திர சில்லில் சிக்கி குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் உழவு இயந்திரம் புரண்டதில் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் தோட்ட நிலத்தை உழுதும் போது இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் புத்தூர் –…

தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு

விளைச்சல் குறைந்துள்ளதால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 10 முதல் 15 ரூபா வரை அதிகரித்துள்ளது. தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 80 ரூபா தொடக்கம் 95 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை தென்னை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…

நண்பனிற்கு பொலிஸ் அதிகாரி செய்த மோசமான செயல்!

நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபா பணத்தை மோசடியாக பெற்றுக்கொண்ட, நிதி மோசடி பிரிவின் பொலிஸ் அலுவலர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, தமது வங்கிக் கணக்கில் இருந்து…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed