நெல்லியடியில் வீதியில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி
வடமராட்சி , நெல்லியடியில் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மயக்கத்திற்கு காரணம் தெரியாமையினால் உடனடியாக சிறுமி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இரத்தக் கறையுடன் வீதியோரம் சடலம்
யாழ்ப்பாணத்தில் இரத்தக் கறையுடன் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை பருத்தித்துறை வீதியில், பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே நபர் ஒருவரின் சடலம் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணப்படும் உடலம் அருகே ஓர் மோட்டார் சைக்கிளும் காணப்படுவதனால்…
கோப்பாய் இராச வீதி விபத்தில் விரிவுரையாளர் பலி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன் இன்றிரவு இடம் பெற்ற விபத்தில் உயிரழந்தார். கோப்பாய் இராச வீதி கிருஷ்ணன் கோவில் சந்தியில் இன்று 03.03.2022 இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் உயிரிழந்தார்.
சாதாரண தர பரீட்சையின் மற்றுமொரு பாடத்தின் பெறுபேறு வெளியானது
2020 (2021) ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையின் மேலுமொரு பாடத்திற்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியற்கலை பாடத்திற்கான பெறுபேறுகளே தற்போது வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொது பட்டமளிப்பு விழா ஆரம்பம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான ‚அமரர் சகாதேவன் நிலக்சன்…
எதிர்வரும் நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை!
நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றர் வரையில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தாழமுக்கப் பிரதேசம் ஒன்று தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அதற்கு அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தொடர்ந்து…
காலைக்கடன்களை முடிக்க சென்றவர் கடலில் மூழ்கி மரணம்!
யாழ்.ஊர்காவற்றுறை – சுருவில் கடலில் மூழ்கி நேற்றய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை – விமலகுமார் (வயது61) என்பவரே உயிரிழந்துள்ளார். காலை கடன்களுக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டிருந்த குறித்த நபர் பின்னர் உயிரிழந்த நிலையில் சடலமாக…
கரவெட்டி பகுதியில் கடை திருட்டில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைது
கரவெட்டி பகுதியில் பல காலமாக கடை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நேற்றய தினம் முன்னிரவு 10.30 மணியளவில் கரவெட்டி சம்பந்தர் கடையடி சந்தியில் உள்ள கடையை உடைப்பதற்காக முயற்சியில் ஈடுப்படிருந்த நபர்களை…
தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டு திகதி அறிவிப்பு!!
எதிர்வரும் 2 வாரங்களில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வழமையாக வருடத்தின் ஆகஸ்ட் மாதம்…
யாழில் அதிகாலை கோரம்! ஒருவர் பலி 3 பேர் ஆபத்தான நிலையில்
யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் திருநெல்வேலி, பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்தனர். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்றை திருநெல்வேலிப் பகுதியில் இருந்து வந்த மகேந்திரா வாகனம் மோதித் தள்ளியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்…
யாழில் நடைபெற்ற உலக சாதனைக்கான தெரிவுப் போட்டிகள்!!
இருவேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் யாழ்.உரும்பிராய் இந்துக்கல்லூரி மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. சிலம்பு சுற்றுதலில் உலக சாதனை நிலை நாட்டுவதற்கான தெரிவுப்போட்டி மற்றும் தனிநபர் புயப்போன்ற போட்டிகள் இடம்பெற்றுள்ளது. தமிழர்களின் புராதன கலைகளில் ஒன்றான சிலம்பு சுற்றுதலில் கின்னஸ்…