யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி.
வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலியான சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. நேற்று குறித்த குடும்பஸதர் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்…
உயர்ந்தன முட்டை,கோழி இறைச்சி விலைகளும்
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழிஇறைச்சி 850 முதல் 900 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டை, கோழி…
வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை
இலங்கையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணின் விலை 161,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 149,000 ரூபாயாக…
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கண் சத்திர சிகிச்சைகள்!
மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமையால் யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று பதில் பணிப்பாளர் மு. நந்தகுமார் தெரிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இதனைத் தெரிவித்தார்.மேலும்,“கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு…
மூளாயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!! இன்னொருவர் படுகாயம்
மூளாயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். இவ் விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நியு கமால் மாபிள் விற்பனை நிலையத்தில் கணக்காளராக பணியாற்றும் காரைநகர் வாரிவளவை சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (வயது49) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.யாழ். பல்கலைக்கழக…
தவணை பரீட்சைகள் மூன்று பிரிவுகளின் கீழ் நடத்த முடிவு
மேல் மாகாணத்தில் பாடசாலை தவணை பரீட்சைகளை மூன்று பிரிவுகளின் கீழ் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் தரம் 11 க்கு மாகாண மட்டத்திலும், தரம் 9 மற்றும் 10 க்கு வலய மட்டத்திலும், தரம் 6, 7…
முல்லைத்தீவு பகுதியில் விபத்தில் ஒருவர் பலி; 22 பேர் காயம்
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னால் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தை…
யாழ்ப்பாணம் வந்த 125 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் சிக்கியது.
சுமார் 125 மில்லியன் ரூபா பெறுமதியான 6 கிலோ தங்கத்தை இந்தியாவிற்கு கடத்த முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்த போது, குறித்த தங்கத்துடன்…
கல்வியங்ககாடு பகுதியில் நீண்ட வரிசையில் மக்கள்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் கல்வியங்ககாடுப் பகுதியில் குடும்ப பங்குகீட்டு அட்டைக்கு, 300 ரூபாய் பெறுமதியான நிர்ணயிக்கப்பட்ட மண்ணெய் வழங்கப்படுகிறது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20-03-2022)…
ஐந்து வயது சிறுவனின் உயிரை பறித்த விபத்து.
நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நிட்டம்புவ, கொங்கஸ்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்விபத்து வேன் ஒன்று லொறியுடன் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்…
அதிகரிக்கப்பட்ட தொலைபேசிக் கட்டணங்கள்
சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி நிறுவனங்கள் இது குறித்து அமைச்சு தெரியப்படுத்தியுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் 30 வீதம் வரை மதிப்பிழந்துள்ளதன் காரணமாக சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும்…