சடலமாக மீட்கப்பட்ட காணாமல்போன தமிழ் வர்த்தகர்
ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போன வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகரின் சடலம் நேற்று (4) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ- வடுவத்தேவ குளத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 58 வயதான அண்ணாமலை பழனி என்ற குறித்த வர்த்தகர், 15 வருடங்களாக இத்தாலியில்…
இலங்கையில் 300 ரூபாயை தாண்டிய அமெரிக்க டொலர்.
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகித அட்டவணைக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 300 ரூபாவை தாண்டியுள்ளது. இலங்கையில் உள்ள அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் தினசரி வெளியிடும் அந்நிய செலாவணி…
ஏழாலைப் பண்ணையில் கோழிகளும், ஆடுகளும் கொள்ளை
யாழ்.ஏழாலை வடக்கு காளி கோயிலடியில் அமைந்துள்ள பண்ணைக்குள் இரவு வேளை உள்நுழைந்த கொள்ளையர் குழு சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கோழிகளையும், ஆடுகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. மேற்படி பண்ணையின் உரிமையாளர்…
புன்னாலைக்கட்டுவனில் எரிபொருளுக்காக மிக நீண்ட வரிசை
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனங்களுக்கான எரிபொருளை(டீசல்) பெற்றுக் கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை(04.4.2022) வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் மேற்படி பகுதியில் பலாலி வீதியில் மிக நீண்ட வரிசையில் பல மணிநேரமாக காத்திருக்கின்றமையை அவதானிக்க முடிந்தது. காலை முதல்…
வல்லை பகுதியில் இருகார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
யாழ்.வல்லை பகுதியில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக பயணித்த நிலையில் பின்னால் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது…
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் செயல்பட தொடங்கின
இலங்கையில் தற்போது சமூக வலைத்தளங்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது. இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். பல்வேறு இடங்களில் போராட்டம்…
யாழில் வீதியில் நடமாடிய 9 பேர் கைது
யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர்கள் தேவையற்று நடமாடிய நிலையில் பொலிஸாரின் வீதி சோதனைகளில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்…
ஊரடங்கிற்கு மத்தியிலும் யாழில் நடந்தேறிய ஏராளமான திருமணங்கள்
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஏற்கனவே நாள் குறிக்கப்பட்ட ஏராளமான திருமணங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை(03.4.2022) யாழில் கோலாகலமாக நடந்தேறியுள்ளன. அந்த வகையில் கோண்டாவில், திருநெல்வேலி, கொக்குவில், ஊரெழு, தெல்லிப்பழை உட்படப் பல பகுதிகளிலும் அமைந்துள்ள திருமண மண்டபங்களில் உற்றார்,…
க.பொ.த.சாதாரண தர பரீட்சை மே 21ல் ஆரம்பம்
க.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி 2021ம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி முதல் யூன் மாதம் 5ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இவ்வாண்டுக்கான…
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்?
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, அதிகாரமுள்ள அதிகாரிகளோ உத்தியோகபூர்வமாக இந்த முடக்கம் குறித்து உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நாட்களில் கணிசமாகக் குறைக்கப்படும் மின்வெட்டு
இலங்கை மின்சார சபைக்கு போதுமான எரிபொருள் வழங்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதிர்வரும் நாட்களில் கணிசமாகக் குறைக்கப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க…