• Sa.. Jan. 11th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழில் நாய்க் கடிக்கு இலக்கான 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

யாழில் நாய்க் கடிக்கு இலக்கான 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

தெரு நாய் மற்றும் பூனையின் நகங்கள் கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார். விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதுதான் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகினார் என்று சட்ட மருத்துவ வல்லுநரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் (வயது-35)…

யாழ்.குடாநாட்டினுள் புகுந்த யானைகள்

மீண்டும் யாழ்.குடாநாட்டிற்குள் யானைகள் புகுந்தமையினையடுத்து பரபரப்பு தொற்றியுள்ளது.ஆனையிறவைக் கடந்து இயக்கச்சியில் யானைகள் குறைந்தது .மூன்று யானைகள் வந்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனையிறவு – தட்டுவன்கொட்டியினையண்டிய பகுதியில் நின்றதாகத்தகவல்கள் வெளிவந்திருந்தன. பின்னர் கொம்படிக்களப்பின் வழியாக சங்கத்தார் வயல் பகுதியை வந்தடைந்து பின்னராக…

முள்ளியவளை பகுதியில் விபத்து குமுழமுனையினை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

முள்ளியவளை களிக்காட்டுப்பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து உந்துருளி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு நெடுங்கேணி வீதியில் களிக்காடு எனப்படும் பகுதியில் நேற்று இரவு உந்துருளியில் பயணித்த 44 அகவையுடைய 6 ஆம் வட்டாரம் குமுழமுனையினை சேர்ந்த சுப்பிரமணியம் கோபிநாத் என்ற…

யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதலை

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், வீட்டில் இருந்த குடும்பஸ்தர் மீது வாள் வெட்டுத்தாக்குதலையும் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ரதீஸ்குமார்…

கைதடி பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!

சித்திரை புதுவருட தினத்தன்று கைதடி வடக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புதுவருட தினத்தன்று காலையில் வீட்டில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு சென்ற சமயம் குறித்த பெண் தொலைக்காட்சி பெட்டியை இயக்க முற்பட்ட வேளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைதடி…

யாழ்.வடமராட்சி கிழக்கில் வீடொன்றின் மீது தாக்கிய மின்னல்.

யாழ்.வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி வடக்கு பகுதியில் நேற்று மாலை வீடொன்றின் மீது மின்னல் தாக்கியுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் ஆட்கள் இருந்தபோதும் உயிர்ச்சேதமின்றி தெய்வாதீனமாக தப்பியுள்ளனர்.

நீர்வீழ்ச்சியில் அடித்துசெல்லப்பட்ட யுவதியின் சடலம் மீட்பு.

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது. ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,…

கிளிநொச்சியில் கனமழை வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்பட்டன. இன்று பகல் ஒரு மணி முதல் இரண்டு முப்பது மணி வரை கொட்டித்தீர்த்த மழை காரணமாக வீதிகள், மற்றும் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் நிரம்பியிருந்தன. சில…

வவுனியாவைச் சேர்ந்த மூவரைக் காணவில்லை!

நுவரெலியா – றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவிலிருந்து சுற்றுலாசென்ற 7 பேர் கொண்ட குழுவினர் றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது, அவர்களில் மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதுடன்,…

வடக்கில் வெள்ளிவரை தொடரும் மழை !

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வரையில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது என பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மன்னார் வளைகுடா…

கட்டுநாயக்காவில் வெளிநாடு ஒன்றிலிருந்து வந்தவரிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடு ஒன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட அரியவகை பொருட்களை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். செடிகள் மற்றும் மீன்களின் பெறுமதி 117,500 ரூபா எனவும், பொருட்களை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்து சந்தேகநபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed