மறு அறிவித்தல் வரை மூடப்படும் மதுபானசாலைகள்.
நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று காலை முதல் பதற்ற நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே நாடளாவிய ரீதியில்…
வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கான அறிவிப்பு.
வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்களது கடவுச்சீட்டு மற்றும் பயணச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் அதிகரித்த பால்மாவின் விலை
பால்மாவின் இறக்குமதி விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒரு கிலோ பால் மா 2,545 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 600 ரூபாவினால் அதிகரித்துள்ளது. 400 கிராம் பால் மாவின் விலை 230 ரூபாவில் இருந்து 1,020…
யாழ் மற்றும் கிளிநொச்சியில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்த துயரம் .
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் பூம்புகார் கடல் மற்றும் மண்கும்பான் சாட்டி கடல் ஆகியவற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். அரியாலை பூம்புகார் கடலில் நீராடிய ஞானகாந்தன் ஜெயமதன் (வயது 36)…
யாழ் சாவகச்சேரியில் பூசகரிடம் பணம் பறித்த திருடர்கள்.
மீசாலை தட்டான்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பூசகரின் பணப் பையை பறித்துக்கொண்டு இளைஞர்கள் இருவர் தப்பி ஓடியுள்ளனர். மீசாலையில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றிற்கு நித்திய பூசையில் ஈடுபடும் பூசகர் மற்றுமோர் ஆலயத்திற்கும் தினப் பூசைக்காக சென்று வருவது வழமையாகும். இவ்வாறு பூசையில்…
மண்ணெண்ணெய்க்கு வரிசை! அளவெட்டி முதியவர் மரணம்
இரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மண்ணெண்ணெய் வாங்குவதற்காக…
இலங்கையர்களுக்கு திங்கள் முதல் நான்காவது தடுப்பூசி!
நான்காவது கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நான்காவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இவர்களைத் தவிர 20 முதல் 60…
யாழில் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்.
சமூக மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், மதுபானம் போதைப்பொருள் பாவனைகளால் தாமாக நோயேற்படுத்தும் தன்மையைத் தவிர்த்து சுகாதார சேவைக்கு ஒத்துழைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு…
தெல்லிப்பழை பகுதியில் மூதாட்டி ஒருவரை வெட்டிக்கொலை
யாழ்ப்பாணம் -தெல்லிப்பழை – வித்தகபுரம் பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியிடம் கொள்ளையிடுவதற்காக சென்றிருந்த சிலர், தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த மூதாட்டி தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக…
யாழ். உடுவில் பகுதியைச் சேர்ந்த சிறை கைதி திடீர் மரணம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன. அம்மன் கோவில் வீதி உடுவில் பகுதியைச் சேர்ந்த யோகராசா ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். மதுபோதையில் குடும்பத் தகராறில்…
வேலணை பகுதியில் கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு
ஊர்காவற்துறை – வேலணை, சரவணை பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த 11 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ரூபன் ஜதுசா என்ற 11 வயதுச் சிறுமியே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் பக்கத்து வீட்டுக்கு சென்ற நேரம் சிறுமி நீராடுவதற்காக கிணற்றடிக்கு…