இலங்கை கடவுச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம்.
வீசா இன்றி 190 நாடுகளுக்கு பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ரடட ஹெடக்(Ratata Hetak) சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சியின் போது சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான கடிதம் ஒன்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரடட…
யாழ். கோண்டாவில் சந்தியில் விபத்து
இந்த விபத்து சம்பவம் யாழ்.– கோண்டாவில் சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இரு மோட்டர்சைக்கிள் மோதுண்டு இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழில் மண்ணெண்ணெய் விநியோகம்!
கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் எரிபொருள் அட்டைகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு…
இலங்கைக்கு சுவிட்சர்லாந்து ஆதரவு அளிப்பதாக உறுதி!
இலங்கை கடுமையான பொருளதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டிற்கு சுவிட்சர்லாந்து தன் முழு ஆதரவை அளிக்கும் என சுவிஸ் தூதர் உறுதி அளித்துள்ளார். அண்மையில், இலங்கை நீதித்துறை அமைச்சரான இலங்கைக்கான சுவிஸ் தூதரான டொமினிக் ஃபர்லரை (Dominik Furgler) இலங்கை நீதித்துறை…
எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம்?
எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(7) உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மட்டுமன்றி உலகலாவிய ரீதியில் எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையால் எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நமது நாட்டின் பொருளாதாரத்தை…
வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் அனுப்பும் அந்நிய செலாவணி வீணாகச் செலவழிக்கப்படமாட்டாது என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார். அதேபோன்று, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் தவறுகளைத் திருத்திக் கொண்டு நாட்டை முன்கொண்டு செல்ல முயற்சிக்கின்றார் என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்க…
யாழில் வயோதிபப் பெண்ணின் சங்கிலி திருட்டு
சாவகச்சேரி – கோவில்குடியிருப்பு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு வந்த வயோதிபப் பெண்ணின் சங்கிலி திருட்டுப் போயுள்ளது. குறித்த ஆலயத்திற்கு நேற்று காலை வந்து வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலியை இனந்தெரியாத நபர் ஒருவர் அறுத்துக்கொண்டு…
யாழில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலி!
யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்திருக்கின்றார். இன்றைய தினம் காலை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது சடுதியாக குளவிகள் இவரை கொட்டிய நிலையில் மயக்க மடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு…
வெதுப்பக உணவுகளின் விலைகளை அதிகரிக்க வாய்ப்பு.
எதிர்காலத்தில் பன் உட்ளிட்ட வெதுப்பக உணவுகளுக்கான விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ரொட்டி தவிர்ந்த அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் பேக்கரி உரிமையாளர்கள் 12 சதவீத வற் வரி செலுத்த வேண்டியிருப்பதால்…
கோண்டாவில் பகுதியில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்.
யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வாகனத் திருத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளின் பாகம் ஒன்று மின்சாரம் மூலம் ஒட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது தீப்பற்றியுள்ளது. இதனையடுத்து வாகன திருத்துமிடத்தில் இருந்தவர்கள்…
யாழ்.வடமராட்சியில் கஞ்சாவுடன் 3 பேர் கைது.
யாழ்.வடமராட்சி திக்கம் பகுதியில் 1கிலோ 900கிராம் கஞ்சாவுடன் மூவர் இன்று வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி, திக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினர் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல்…