மீண்டும் உச்சம் தொடும் தங்கத்தின் விலை!!
இலங்கையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது இதன்படி, இன்று(17) 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் மலசலகூட குழியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்பு
மலசலகூட குழி ஒன்றில் இருந்து இரண்டு வயது குழந்தையின் சடலம் ஒன்று இன்று (17) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு, வத்தல்பல, பள்ளியமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள மலசலகூட குழியிலேயே குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என…
ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட தீர்மானம்
சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இந்த…
யாழில் முகமூடி கொள்ளையர்கள் கைது!
பருத்தித்துறை துன்னாலை – மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு காயங்களை விளைவித்து 12 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த பெண்…
யாழில் இன்று பெற்றலுக்காக மிக நீண்ட வரிசை.
யாழ்ப்பாணத்தில் பெற்றலுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்து பெற்றோலை பெற்று செல்கின்றனர். இன்றைய தினம் சாவகச்சேரி, சுன்னாகம், புலோலி மற்றும் பரமேஸ்வர சந்தி ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகிக்கப்படும் என பொற்றோலிய…
காணாமல் போன மகனுக்காக காத்திருந்து உயிரைவிட்ட தாய்!
தனது மகனின் விடுதலைக்காக போராடி, 26 வருடங்கள் ஏக்கத்துடன் காத்திருந்த தாயொருவர், மகனை காணாமலேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதியான விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபனின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரியே என்பவரே நேற்றைதினம் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மண்ணறைக்குப் போவதற்குள்…
ஒன்லைனில் கடவுச்சீட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு
ஒன்லைனில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை தொடர்பில் புதிய அறிவிப்பை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூலை 20 ஆம் திகதி வரை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு…
இலங்கையில் மூன்று வருடங்களுக்கு மின்வெட்டு தொடரும்.
குறைந்தது இன்னும் மூன்று வருடங்களுக்கு நாட்டில் மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள…
டீசல் என்ற போர்வையில் தண்ணீர் விற்பனை.
டீசல் என்ற போர்வையில் தண்ணீரை கேன்களில் நிரப்பி விற்பனை செய்த சம்பவமொன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது. எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த இரண்டு நபர்களே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர். 60 லீற்றர் டீசலை விற்பனை செய்யும் போர்வையில் குறித்த இரண்டு பேரிடமும் சந்தேக நபர்…
அச்சுவேலியில் கையெழுத்துப் போராட்டம்.
விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். அச்சுவேலி சந்தையில் இன்று காலை இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளன
ஏ9 வீதியில் விபத்தில் ஒருவர் மரணம்
ஏ9 வீதி, கொடிகாமம் – கொயிலாமனை சந்திப் பகுதியில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர். உயிரிழந்தவர்…