முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!
நேற்றையதினம் சீகிரிய பிரதேசத்தில் உள்ள துன்னா பிந்தி நீர்த்தேக்கத்திலில் நீராடிக்கொண்டிருந்த இளைஞனை முதலை இழுத்துச்சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்த இன்றையதினம் (16) குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவனை தந்தை காப்பாற்ற முயற்சி…
யாழில் விபத்தில் சிக்கிய சுகாதார சேவைகள் ஊழியர் உயிரிழப்பு !
யாழி்ல இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த சுகாதார சேவைகள் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த 05ம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…
பாடசாலைகளுக்கு 20 வரை விடுமுறை
சகல அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுமதிப்பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் ஜூலை 18 ஆம் திகதி முதல் 20 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள கல்வியமைச்சு, பாடசாலை புதிய தவணை வியாழக்கிழமை (21) ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது.
யாழில் மீட்கப்பட்டுள்ள பெருந்தொகையான கஞ்சா ;
யாழ்ப்பாணத்தில் – மண்டைதீவு கடற்பரப்பில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த கடற்கரையிலிருந்து 46 கிலோ கஞ்சா (14) மாலை மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட நிலையில் கடற்படையினரை கண்டு கைவிட்டு சென்றிருக்கலாம்…
சுன்னாகம் பகுதியில் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
யாழில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுமி குறித்த பகுதியையுடைய 14 வயது சிறுமி என பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.…
இலங்கையில் செயலிழந்த டிவிட்டர்!
நாட்டில் டுவிட்டர் சமூக ஊடகம் சற்று நேரம் செயலிழந்திருந்தது. பயனர்களால் டுவிட்டர் தளத்துக்குள் உள்நுழைய முடியாத நிலையொன்று காணப்பட்டது. எனினும், நிலைமை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
நாளை சுகாதார ஊழியர்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படும் இடங்கள்
அத்தியாவசிய சேவையின் கீழ் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நாளை முதல் எரிபொருள் விநியோகம்…இடங்கள் மற்றும் வழங்கப்படும் எரிபொருள் அளவுகளின் விபரங்கள் வெளியிடப்பட்டன…
யாழ்.கந்தர்மடம் பகுதியில் ரயில் விபத்து! ஒருவர் உடல்சிதறி பலி
யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உடல்சிதறி உயிரிழந்துள்ளார். கந்தர்மடம் – ஆத்திசூடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மானிப்பாய், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகேந்திரராசா என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம்…
இன்று மதியம் 12.00 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்!
கொழும்பு மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
யாழில் மீண்டும் அதிகரிக்கும் கொராணா தொற்று
யாழில் நேற்றையதினம் இருவருக்கு கொராணா தொற்று உறுதியானதையடுத்து பொதுமக்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அல்லாரை மற்றும் கைதடிப் பகுதியிலேயே இவ்வாறு கொராணா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட நபர்களுக்கு…
கண்ணீர்புகை தாக்குதலில் இளைஞர் ஒருவர் பலி.
பிரதமர் செயல்கத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்பப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் கண்ணீர்புகை தாக்குதலால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது இன்றைய தினம் கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற…