ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள்
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரன்வீக் ராணிதோட்டத்தை சேர்ந்த கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற தாய் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் இந்த மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளதென வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர்…
இலங்கையில் மீண்டும் தலைகாட்டும் கொரோனா!
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள பதிவாகியுள்ளது. அதன்படி இலங்கையில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 16,793 என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை…
யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை!
தென்வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடஅகலாங்கு10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.5E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக 600 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.…
முல்லைத்தீவில் கடலுக்குள் காணாமல் போன இளைஞன்!
முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் இறால் எடுக்க சென்ற இளைஞன் கடல் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் இறால் எடுக்க சென்ற இளைஞன் ஒருவர் நீர் ஏரியில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.…
வடமராட்சி பகுதியில் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுமி ஒருவர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கர்த்தகோவளம் பகுதியில் 18 வயது சிறுமி ஒருவர் கடலில் குளித்துவிட்டு அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிய போது மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி கல்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்து நண்பர்கள் நான்கு…
யாழில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் சிசு மரணம்
பிறந்த 50 நாட்களேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் சாவகச்சேரியில் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது. பெண் சிசு அசைவற்று காணப்பட்ட நிலையில் பெற்றோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிசுவை எடுத்து சென்றுள்ளனர். எனினும் சிசு ஏற்கெனவே…
பாடசாலை மாணவிகள் திடீர் சுகவீனம்! வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலை மாணவிகள் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் மதவாச்சி யக்கவேவ கல்லூரியில் இடம் பெற்றுள்ளது. தரம் 07 இல் கல்வி கற்கும் 5 மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த 5 மாணவிகளும் காய்ச்சல், வாந்தி, தலைவலி,…
யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து இளைஞன் பலி
யாழ்ப்பாணம் நவாலி மூத்தவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கிணறொன்றில் தவறி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளான். ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கிணற்றடியில் நின்ற போது நிறை போதையில் நிலை தடுமாறி…
இன்று ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு விபரம் வெளியீடு
இன்று (20) ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 1மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க…
இலங்கையிலிருந்து சில நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் செல்ல தடை !
சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு தொழிலுக்கு செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளது. ஓமானில் இந்நாட்டு பெண்களை பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யும் தகவல் வெளியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள தகவல்
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்பில் காணப்படுகின்ற தாழமுக்கம் இன்று வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கமானது நவம்பர் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கு – வடமேற்கு…