• Fr. Nov 1st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழில் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த கிராம அலுவலர்

யாழில் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த கிராம அலுவலர்

கரவெட்டி கட்டைவேலி கிராம அலுவலர் பா.லலித் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் பிரதேச செயலகம் சார்பில் விருது பெற்றிருந்த அவர், கிராமத்தின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றிய கிராம அலுவலராக திகழ்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் கோர விபத்து! தங்கை பலி – அக்கா படுகாயம்

திருகோணமலையில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில் தமிழ் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புல்மோட்டை பிரதான வீதியின், கும்புறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும்…

யாழில் 11 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காரைநகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தைக்கு நேற்று அதிகாலை திடீர் சுகவீனம் ஏற்பட்டமையால், காரைநகர் வலந்தலை வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்தனர்.…

உலகக் கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் சர்வதேசத்தை ஈர்த்த இலங்கைத் தமிழ் இளைஞன்!

இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை மீண்டும் வலுப்படுத்தி, அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் காட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண…

கல்வியங்காடு பகுதியில் பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இன்று (27) மாலை பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் பட்டாரக வாகன சாரதி மற்றும் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…

யாழில் ஹெரோயின் பாவனை ! 15 வயது மாணவன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் ஊசிமூலம் ஹெரோய்ன் பயன்படுத்திய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மூளை மற்றும் இதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருடன் சேர்த்து இந்த ஆண்டு 13 பேர் உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனையாளர்கள் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக எரிக்கப்பட்ட பாடசாலை மாணவன்!

அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார்…

மானிப்பாயில் அபாயகரமான பொருளுடன் மூவர் கைது!

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சந்தேகநபர்கள் மூவர் உயிர்க்கொல்லி ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர். இக் கைது நடவடிக்கை (28-11-2022) மானிப்பாய் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தலா 30 மில்லிக்கிராம் ஹெரோயினையும் மற்றையவர் 40 மில்லிக்கிராம் ஹெரோயினையும் உடமையில்…

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ‚9 ஏ‘ சித்தி பெற்ற இரட்டை சகோதரிகள்

காலி – மாபலகம பிரதேசத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சகல பாடங்களிலும் ‚ஏ‘ சித்தியைப் பெற்ற இரட்டை சகோதரிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன. காலி , மாபலகம பிரதேசத்தில் வசிக்கும் தினுமி நிம்சரா மற்றும் ரசாரி ரன்சராய் என்ற இரட்டை…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு 

வவுனியா – புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய காட்டு யானை உயிரிழந்துள்ளது. உயிரிழந்த காட்டு யானை விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கேபிளில் அகப்பட்டு நேற்று (27.11.2022) இரவு உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் யானையின்…

கட்டாரில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு.

கட்டாரில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைதான கட்டுமானம், சாலை அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கட்டாரில் இருந்து உயிரிழந்தவர்களின்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed