ஊடகவியலாளர் நிபோஜன் கொழும்பில் மரணம்
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் நிபோஜன் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். இன்று(30) கொழும்பு தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மரணமடைந்துள்ளார். உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் 15 வயதுச் சிறுவனை இழுத்துச் சென்ற கடல் அலை !
மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் அலையில் சிக்குண்டு காணாமல் போயுள்ளார். நேற்று (29) பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும், சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போன சிறுவன்…
யாழில் இடம்பெற்ற பயங்கர விபத்து! ஒருவர் பலி !
யாழ்ப்பாணத்தில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (29-01-2023) மாலை சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிபொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பல நகரங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு
பல நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நாட்டில் உள்ள காற்று மாசு அளவீடுகள் தீவின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது. தற்போது, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 150 முதல் 170 வரை…
யாழ். பொதுமக்களுக்கு பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத்…
இந்த வருடம் முதல் மாறவுள்ள கடவுச்சீட்டு!
இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய கடவுச்சீட்டில் சுயவிபர தகவல்களைக் கொண்ட இலத்திரனியல் அட்டை (chip) சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார். அதோடு , உலகின் பெரும்பாலான நாடுகள்…
இலங்கையில் விரைவில் அமுலுக்கு வரவுள்ள மெட்ரோ ரயில் திட்டம்
கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து நீர்கொழும்பு வரை 25 புகையிரதநிலையங்களை அபிவிருத்தி செய்து மெட்ரோ ரயில் திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தில் இருந்து நீர்கொழும்புவரை 41 கிலோமீற்றர் தூரத்திற்கு தூண்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாதையில் இந்த மெட்ரோ ரயில் சேவையை…
இளவாலை பகுதியில் இளைஞன் ஒருவர் படுகொலை.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கி 29 வயதுடைய இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் (26) வீதியில் சென்றுகொண்டிருந்தவேளை போதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த இருவர் அவருடன் முரண்பட்டனர். பின்னர் முரண்பாடு…
யாழில் மின்சார பாவனையாளர்களுக்கு மின்சார சபையின் அறிவுறுத்தல்
யாழில் மின்சார கட்டணம் நிலுவையிலுள்ள பாவனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் யாழ். தலைமை பிரதம பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (27.01.2023) இந்த நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் வாரங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.…
புத்தூர்.நாவக்கிரி பகுதியில் பிறந்து 30 நாட்களான குழந்தை உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் புத்தூர் நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பதே நாட்களான குறித்த குழந்தை இன்று தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரக்கேறியதில் உயிரிழந்துள்ளது. புத்தூர் நவக்கரி மாதா கோவிலடியை சேர்ந்த நிசாந்தசிறி என்பவரின் மூன்றாவது ஆண் குழந்தை தாயிடம் பாலருந்திய போது திடீரென…
1ஆம் திகதி இலங்கையை நெருக்கும் புதிய காற்றழுத்தம்.
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை, ஜனவரி 28ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…