புலோலியில் கீரி கடித்த வயோதிபப்பெண் உயிரிழப்பு
கீரி கடிக்குள்ளாகிய வயோதிபப் பெண் 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளார்.அவரது உயிரிழப்புக்கு நீர்வெறுப்பு நோய் காரணம் என்று மருத்துவ அறிக்கையிட்டுள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்த வயோதிபப் பெண்ணின் மூளையை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்ப சட்ட மருத்துவ வல்லுநர் க.வாசுதேவா பணிந்துள்ளார்.…
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் திகதி நீட்டிப்பு.
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, நாளை (10) அதிகாலை…
கேரளாவில் சிறுவர்களுக்கு ‘தக்காளி’ காய்ச்சல்!
கேரளாவில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ‘தக்காளி’ காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கேரளாவில் 5 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு அதீத காய்ச்சலுடன் உடலில் சிறிய தடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தத் தடிப்புகள் சிவப்பு நிறத்தில்…
மறு அறிவித்தல் வரை மூடப்படும் மதுபானசாலைகள்.
நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று காலை முதல் பதற்ற நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே நாடளாவிய ரீதியில்…
வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கான அறிவிப்பு.
வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்களது கடவுச்சீட்டு மற்றும் பயணச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆஞ்சநேயரின் அவதாரங்கள் பற்றிய சில அரிய தகவல்கள்.
பஞ்சமுக ஆஞ்சநேயர்: ராமாயணத்தில் பெரும் பங்கு வகித்த அனுமனை பற்றிய புராணங்களை கேட்கும் பொழுது நமக்கு மெய் சிலிர்க்கும். அதில் மிக முக்கியமாக அமைந்திருப்பது பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரமாக இருக்கிறது. நிருத்த ஆஞ்சநேயர்: ராமருக்கும், ராவணனுக்கும் இடையே சண்டை நடந்த பொழுது…
கனடாவில் தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு மறுக்கப்பட்ட அனுமதி .
கனேடிய மாணவர்களினால் மிகவும் நேசிக்கப்படும் இலங்கைத் தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு கற்பிப்பதற்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது. பிரபல இரசயானவியல் ஆசிரியரான திரு திருக்குமாரன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவருக்கு மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. கனடாவில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டியது…
மீண்டும் அதிகரித்த பால்மாவின் விலை
பால்மாவின் இறக்குமதி விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒரு கிலோ பால் மா 2,545 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 600 ரூபாவினால் அதிகரித்துள்ளது. 400 கிராம் பால் மாவின் விலை 230 ரூபாவில் இருந்து 1,020…
யாழ் மற்றும் கிளிநொச்சியில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்த துயரம் .
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் பூம்புகார் கடல் மற்றும் மண்கும்பான் சாட்டி கடல் ஆகியவற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். அரியாலை பூம்புகார் கடலில் நீராடிய ஞானகாந்தன் ஜெயமதன் (வயது 36)…
சுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு!
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்மொழி 28 ஆவது பொதுத்தேர்வு சுவிற்சர்லாந்தில் நாடுதழுவிய ரீதியில் 61 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இப்பொதுத்தேர்வானது (08) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும்…
யாழ் சாவகச்சேரியில் பூசகரிடம் பணம் பறித்த திருடர்கள்.
மீசாலை தட்டான்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பூசகரின் பணப் பையை பறித்துக்கொண்டு இளைஞர்கள் இருவர் தப்பி ஓடியுள்ளனர். மீசாலையில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றிற்கு நித்திய பூசையில் ஈடுபடும் பூசகர் மற்றுமோர் ஆலயத்திற்கும் தினப் பூசைக்காக சென்று வருவது வழமையாகும். இவ்வாறு பூசையில்…