சென்னை வந்த புகையிரதம் கோரவிபத்து -பலர் பலி,
சென்னை வந்த புகையிரதம் மற்றொரு புகையிரதத்துடன் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததுடன் 179 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு…
சூடானில் பட்டினியால் 60 குழந்தைகள் மரணம்!
சூடானில் பட்டினியால் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால், சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் மக்களிடையே அச்சம்…
இரண்டு மணித்தியாலங்களில் இனி கடவுச்சீட்டு
ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினார்.
மாணவி கழுத்தறுத்து படுகொலை!
தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமுற்ற அண்ணன், அவரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், பியகமவில் நேற்று (01.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பியகமவைச் சேர்ந்த எஸ்.ஹிருணிகா…
தவறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
அமெரிக்க விமானப்படை அகாடமி பட்டமளிப்பு விழாவில் ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது கொலோராடோ, அமெரிக்க வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மிக வயதான அதிபாராக ஜோ பைடன் இருந்து வருகிறார். இந்நிலையில் கொலராடோவில் உள்ள அமெரிக்க…
இலங்கையில் இந்த மாத இறுதிக்குள் முற்றாக நடைமுறைக்கு வரும் தடை
இலங்கையில் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகளின் தடை தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் தகவலொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த மாத இறுதிக்குள் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, மாலை,…
இத்தாலியில் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் பயன்படுத்த அனுமதி
இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் வாழும் மற்றும் பணியாற்றும் லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு நடைமுறைப் பிரச்சினையாக உள்ள சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமத்தை…
பிரான்ஸில் யாழ் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.
யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த நேற்று முன் தினம் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணம்…
நியூஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
நியூஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து…
பெற்றோல், மண்ணெண்ணெய் விலைகள் குறைப்பு
எரிபொருள்களின் விலையை நள்ளிரவு (ஜூன் 1) மாற்றியமைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் ஒன்று 15 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை லீற்றர் ஒன்று 318 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 95 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர்…
அச்சுவேலியில் வீடொன்றில் கூரிய ஆயுதங்கள் மீட்பு ; இளைஞன் கைது!!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அச்சுவேலி மேற்கில் உள்ள வீடொன்றினை முற்றுகையிட்டு , தேடுதல் நடத்தினர்.…