• Do. Dez 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்..!

Apr 10, 2023

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மட்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவில் 3.9 மற்றும் 4.6 ஆக பதிவானது. அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து 220 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் நான்கு முறை நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று நான்கு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 5.5-ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed