ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்று சோமாலியா. இந்த நாட்டில் கடும் வறட்சி நிலவும். ஆனால், கடந்த 2 வாரங்களாக இங்கு கனமழை பெய்து வருகிறது.
இதனால், ஷபெல்லே மற்றும் ஜூபா ஆகிய நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில், அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டடிடங்கள், உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. பாதுகாப்பை முன்னிட்டு, அபகுத்யில் வசித்து வந்த சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர்.
இந்த எதிர்பாராத திடீர் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.
ஆபத்தான பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்புப்படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கனமழையால் ஓரளவுக்கு வறட்சி குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.