• Do. Nov 28th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் மீண்டும் நில அதிர்வு

Mrz 30, 2023

இலங்கையின் பல பகுதிகளில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் இன்று (30) பிற்பகல் 1.02 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை களுத்துறை, பேருவளை, பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சமூக ஊடகப் பயனாளர்கள் தங்களது பகுதிகளிலும் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக பதிவிட்டுள்ளனர்.  

 

  எனினும் இதனால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed