• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பால் மாவின் விலை தொடர்பில் வெளியான தகவல்

März 29, 2023

தற்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பழைய விலையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் கையிருப்பு தீர்ந்தவுடன் புதிய விலையின் கீழ் பால் மா சந்தைக்கு வெளியிடப்படும் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பொதியின் விலையை 80 ரூபாவினாலும் குறைக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். இது உலக சந்தையில் தற்போதைய விலையை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

இதன்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடையும் பட்சத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பால் மாவின் விலை குறைக்கப்படும் போது அதன் நன்மை நுகர்வோருக்கும் வழங்கப்படும் என குறித்த பேச்சாளர் தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed