• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் !ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு ;

März 28, 2023

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹொக்கைடோ நகரில் இன்றைய தினம் (28.03.2023) நண்பகல் 2.48 மணியளவில்  ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறியுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் இந்த நிலநடுக்கம் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் குறிப்பிட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed