• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசு.

März 22, 2023

மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக சிசுவின் சடலம் கீழே விழுந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் கருத்தரித்த ஒருவர் இதனை பிரசவித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு மூன்று மாத வளர்ச்சிக் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed