• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவில் குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்!

März 20, 2023

வவுனியாவில் குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா குளத்தில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் வவுனியா பொலிஸாரால் நேற்று (19.03) காலை மீட்கப்பட்டிருந்தது.

அதன்படி குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் இளைஞனின் சடலம் அடையாளம் காணப்படவில்லை. 25 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுவதுடன், இடது கையில் அம்மா என பச்சை குத்தியுள்ளார்.

கழுத்தில் சிவப்பு நூலும், ஒரு கையில் ஆலய நூலும், மற்ற கையில் நீல பட்டியும் அணிந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed