• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தீயில் கருகிய பல்பொருள் விற்பனையகம்

März 17, 2023

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை கடை ஒன்றுக்கு தீ வைத்த நிலையில் கடையானது பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

கடையின் உரிமையாளர் இன்று (17) காலை வழமை போல விற்பனை நடவடிக்கைக்காக கடையை திறக்க முற்பட்டவேளை கடையானது பகுதி எரிந்து சேதமாகியிருந்தமை அவதானிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed