• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சியில் முதியவரை மோதிய பொலிஸார்!

Mrz 14, 2023

கிளிநொச்சி ஏ9 வீதியில் வேகமாக வந்த போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை 8.30 மணியளவில் ஏ9 வீதியில் கிளிநொச்சி பிராந்திய கல்விப் பணிமனைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

ஏ9 வீதியை இரு சக்கர வாகனத்தில் கடக்க முற்பட்ட போது, ​​அதிவேகமாக வந்த போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதியது.

இரு சக்கர வாகனத்தில் பயணித்த முதியவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed