• Mo.. Dez. 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

März 13, 2023

நாட்டில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வந்த நிலையில் அண்மைய காலங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்து வந்தது.

எவ்வாறாயினும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, 22 கரட் தங்கத்தின் விலை இன்று 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் 22 கரட் தங்கத்தின் விலை 134,000 ரூபாவாக காணப்பட்டது.

அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை இன்று 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் 24 கரட் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed