• Do. Dez 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

7 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

Mrz 9, 2023

சதொச விற்பனை நிலையத்தினால் 7 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாயின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1500 ரூபாவாகும்.

சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 339 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 230 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 218 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் சிவப்பரிசியின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 155 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் வெள்ளை நாட்டரிசியின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 188 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 129 ரூபாவாகும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed