• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆப்கானிஸ்தானில் கடுங்குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு !

Jan 28, 2023

ஆப்கானிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருவதால், கடந்த 2 வாரங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வடக்கு மாகாணங்களான பால்க், ஜாவ்ஜான், பஞ்ச்ஷிர் ஆகிய மாகாணங்களில் அதிகளவு இறப்புகள் நேரிடுவதாகவும், மொத்தம் 20 மாகாணங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்ததாகவும் தாலிபான் தலைமையிலான கால்நடைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குளிர்ந்த காலநிலை மற்றும் புற்கள் பற்றாக்குறையால் கால்நடைகள் பலியானதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, கடுங்குளிரால் ஆப்கனில் 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed