நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது.
இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற உறுப்பினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எனவே, நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவிப் ஏற்றார்.
முன்னதாக, ஜனவரி 19 ஆம் திகதி நியூசிலாந்தின் பிரதமர் பதவில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டென் அறிவித்தார்.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், ஜெசிந்தா பிரதமராக தேர்வானார். தொடர்ந்து 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று 2 ஆவது முறையாக ஜெசிந்தா பிரதமரானார்.
6 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஜெசிந்தா இனி தன்னிடம் நாட்டை வழிநடத்தும் முழு ஆற்றல் தன்னிடம் இல்லை எனவே பதவி விலகுகிறேன் என அறிவித்தார். அத்துடன் அடுத்த தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை எனவும் அவர் கூறினார்.