காய்ச்சல் 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு டெங்கு நோய் தடுப்ப பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி டிசம்பர் மாதத்தில் மட்டும் 8842 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் இந்த ஆண்டில் 35800 பேர் டெங்கு நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை எதிர்வரும் மாதங்களில் மேலும் நோயாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல்களை வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.