கணவன்மார்களை மதிப்பும் மரியாதையுமாக நடத்திய காலம் போய் உரிமை அதிகம் எடுத்துக் கொண்டு சமமாக மதிக்கப்படும் காலமும் வந்தாயிற்று.
வீட்டில் பேசப்படும் வார்த்தைகளும் ஒருவருக்கு கொடுக்கப்படும் மரியாதையும் கூட மகாலட்சுமிக்கு மிகவும் முக்கியமாம்.
அமங்கலமான வார்த்தைகளை பேசுபவர்கள் இடத்தில் மகாலட்சுமி தங்குவதில்லை என்பது ஐதீகம்.
காரணம்
அந்த வகையில் கணவன்மார்களை மனைவிமார்கள் திட்டுவது நல்லதா? ஒரு பெண்ணிடம் பணம் தங்காமல் போவதற்கு என்ன காரணம்?
ஆன்மீகத்தில் மகாலட்சுமிக்கு தனி இடம் உண்டு.மகாலட்சுமி செல்வத்தை வழங்குபவள் மட்டும் அல்ல சகலத்தையும் வழங்குபவளாக இருக்கின்றாள்.
ஆச்சாரத்தை கடைபிடித்தல்
அதனால் தான் காலையில் எழுந்ததும் அந்த காலங்களில் ஆச்சாரத்தை கடைபிடித்து வாசலில் கூட்டி பெருக்கி சாணம் தெளித்து அழகிய வர்ண கோலங்கள் இட்டு நடுவே பூசணி பூவை சொருகி வைத்து வாசலின் இருபுறமும் இரு விளக்குகள் ஏற்றி மகாலட்சுமியை அன்புடன் வீட்டிற்கு அழைப்பார்கள்.
மகாலட்சுமி சொர்க்கத்தில் சொர்க்கலக்ஷ்மி என்றும் உலகில் ராஜ்யலட்சுமி என்றும் வீட்டில் கிரகலட்சுமி என்றும் அழைக்கப்படுகின்றாள்.
வீட்டில் கிரகலட்சுமி படம் வைத்திருந்தால் லட்சுமி அருள் பரிபூரணமாக குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
கிரகலட்சுமி
கிரகலட்சுமி என்பது பசு மாட்டுடன் வீட்டிற்குள் லட்சுமி காலடி எடுத்து வைக்கும் படமாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் காட்டி உள்ளது தான் கிரகலட்சுமி.
இந்தப் படம் வீட்டில் வைத்திருந்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை செல்வங்களும் நம் வசமாகும். மகாலட்சுமி கணவனை திட்டும் பெண்களிடம் இருப்பதில்லையாம்.
அதே போல மனைவியை ஏசுபவர்களிடமும் மகாலட்சுமி தங்குவதில்லை.அமங்கல சொற்களை வீட்டில் பேசினால் மகாலட்சுமி அங்கு தங்குவதில்லை.
பணம் என்பது நிலையான ஒரு விஷயம் அல்ல கைக்கு கை மாறிக் கொண்டே இருக்கும் இந்த பணத்தை நீங்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றாலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றாலும் வீட்டில் நிம்மதி இருக்க வேண்டும்.