• Di.. Jan. 7th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் !

Jan. 5, 2023

யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.கோப்பாய் – கிருஷ்ணன் கோவிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் உரும்பிராய் – நல்லூர் ராசா பாதை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆபத்தான சந்திப்பாக கருதப்படும் இச்சந்தியில் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed