• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோப்பாய் பகுதியில் கத்தி முனையில் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!

Jan 4, 2023

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கத்தி முனையில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினில் நள்ளிரவு வேளை கூரிய ஆயுதங்களுடன் புகுந்த நான்கு பேர் அடங்கிய கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தோரை கத்தி முனையில், மிரட்டி 10 பவுண் தங்க நகைகள், ஒரு இலட்ச ரூபாய் பணம் மற்றும் 3 கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed