• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அச்சுவேலி பகுதியில் கொள்ளையனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

Jan. 4, 2023

யாழில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையனை பொதுமக்கள் மடக்கபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தயைடுத்து அவனிடம் இருந்து ரூ.02 இலட்சம் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டன.

இச்சம்பவமானது அச்சுவேலி வடக்கு கந்தசாமி கோயில் பகுதியில் நேற்று இரவு 12 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வீடொன்றை உடைக்க முற்பட்ட திருடன் கிராம மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து சுமார் 02 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed