• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை விரதம்.

Jan 3, 2023

முருகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்தது என்பதால் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 

செவ்வாய்க்கிழமை ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் 9 வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும் என்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும் என்றும் தைரியத்தைக் கொடுத்து நாம் எல்லா வகையிலும் வெற்றிபெற வைக்கும் சக்தி கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிறப்பானது என்றால் மார்கழி மாத செவ்வாய்க் கிழமை என்பது முருகனுக்கு கூடுதல் சிறப்பு என்றும் மார்கழி மாத செவ்வாய் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி விரதம் இருந்தால் துன்பங்கள் பறந்தோடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். 

அதே போல் கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க் கிழமை விரதம் இருந்தால் அதிக பலன்கள் உண்டு என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed