• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விமானப் பயணிகளுக்கு அறிமுகமாகும் புதிய வசதி !

Dez 30, 2022

இலங்கைக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் அவசியமான வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை இப்போது இணையவழியில் நிரப்ப முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து உள்வரும் பயணிகளும், வெளியூர் செல்லும் இலங்கையர்களும்  அட்டைகளை இணையவழியில் பூர்த்தி செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இந்த செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணிகள் தமது பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk ஊடாக இந்த அட்டையை இணையவழியில் நிரப்புவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed