கொரோனா பெருந்தொற்று மற்றும் கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றியாளர் ஆகியவற்றை துல்லியமாக கணித்துள்ள பிரேசில் நாட்டின் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்ற அதோஸ் சலோமி புத்தாண்டு கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு, பிரித்தானிய ராணியாரின் மரணம், கத்தார் கால்பந்து இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு உள்ளிட்ட பலவற்றை துல்லியமாக கணித்தவர் பிரேசில் நாட்டினரான அதோஸ் சலோமி.
இவர் தற்போது பிறக்கவிருக்கும் புத்தாண்டு தொடர்பில் முக்கிய மூன்று கணிப்புகளை தற்போது பகிர்ந்துள்ளார்.
முதலாவதாக, கொரோனா போன்று மிக ஆபத்தான இன்னொரு பெருந்தொற்றுக்கான வாய்ப்புகள் மிக அதிகம் என அதோஸ் சலோமி கணித்துள்ளார்.
ஏற்கனவே சைபீரியாவில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆபத்தான கிருமி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
மட்டுமின்றி, நவம்பர் மாதம் பிரெஞ்சு ஆராய்ச்சிகள் பண்டைய வைரஸைக் கண்டுபிடித்ததுடன், அது இன்னும் உயிருடன் இருந்தது எனவும் நகலெடுக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் அதோஸ் சலோமியின் கணிப்பின் படி புதிய கொடிய தொற்றுநோய் அண்டார்டிகாவின் பனிக்கட்டிகளுக்குள் இருந்து உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, புதிய பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர மிக நீண்ட காலம் போராட வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.
அடுத்ததாக கொரோனா பெருந்தொற்றுக்கு புதிய மருந்தொன்று உருவாக்குவார்கள் எனவும், அது மொத்தமாக குணப்படுத்தும் எனவும் சலோமி குறிப்பிட்டுள்ளார்.
2023ல் ஏரியா 51 எனப்படும் அமெரிக்க இராணுவத் தளம் தொடர்பான ரகசியங்கள் அம்பலமாகும் என சலோமி கணித்துள்ளார்.
ஏரியா 51ல் ஒரு ரகசிய சுரங்கம் செயல்படுவதாகவும், அது 2023ல் திறக்கப்படும் எனவும் அவர் கணித்துள்ளார்.
இந்த சுரங்கமானது இன்னொரு உலகத்திற்கான வாசல் எனவும் சலோமி குறிப்பிட்டுள்ளார்.