யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் – வாதரவத்தைப் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாதரவத்தை – பொிய பொக்கணைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான செ.ராகுலன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் ஆடு மேய்க்கச் சென்றிருந்த நிலையில் நேற்று காலை வரையில் வீடு திரும்பாத நிலையில், அவரைத் தேடி தந்தை சென்ற போதே இளைஞர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
வலிப்புக் காரணமாக இளைஞர் உயிாிழந்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.