• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சியில் ஆடு மேய்த்தவருக்கு அடித்த அதிஷ்டம்

Dez. 20, 2022

ஆடு மேய்த்த ஒருவருக்கு அதிஷ்டம் அடித்தபோதிலும் அவரின் நெகிழ்ச்சியான செயலால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

கிளிநொச்சி – கனகாம்பிகை குளம் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவேளை வீதியில் 95 ஆயிரம் ரூபாய் பணத்தினை கண்டெடுத்துள்ளார்.

இவ்வாறு கண்டெடுத்த பணத்தை கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்த நிலையில், எவரும் அதற்கு உரிமை கோராத நிலையில் குறித்த பணம் இன்றைய தினம் கிளிநொச்சி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பணத்தினை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். வீதியில் கிடந்து எடுத்த பணத்தை உரியவர்களிடம் சேர்ப்பதற்கு நல்லுள்ளம் கொண்ட அவரின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed