இலங்கையில் இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் முகக் கவசங்களை அணிந்து, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகம் தெரிவித்துள்ளது.
கடுமையான தொண்டை புண் மற்றும் காய்ச்சல் என்பன இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் அறிகுறியாக இருக்கும் என இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் ரோஹினி வடநம்பி தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் இந்த வைரஸின் தாக்கம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார் .
ஏதாவது காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.