• Di. Nov 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் சூறாவளி ஏற்படும் அபாயம்!

Dez 18, 2022

நாட்டின் காலநிலையில் தாக்கம் செலுத்திய மாண்டஸ் சூறாவளி பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூறாவளி தாக்கத்தால் சமீப நாட்களில் நாடு முழுவதும் ஒரு குளிர் காலநிலை ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்ககடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுவடைந்தது.

இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உட்பட இலங்கையின் சில இடங்களில் கடும் மழை பெய்தது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் திடீரென சூறாவளியுடன் காற்றின் தோற்றம் ஏற்பட்டது.

இந்த சூறாவளி திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

இதன் காரணமாக நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நிலவியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாட்டில் கடந்த 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை அந்தமான் தீவைச் சூழவுள்ள நிலைமை தற்போதும் காணப்படுவதாகவும், காற்றழுத்தத் தாழ்வு நிலை சிறிதளவு வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது சூறாவளியாக மாறி இலங்கையை பாதிக்குமா என்பதை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வளிமண்டளவியல் அமைப்பு மற்றும் வழித்தடத்தில் உள்ள நீராவியின் அளவைப் பொறுத்தே அனைத்தும் அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் சில இடங்களில் 100மி.மீக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் அளவில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed