கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலில் மோதி முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்றைய தினம் தனது வீட்டின் முன் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(08) முற்பகல் 11.45 மணியளவில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த யாதேவி புகையிரதத்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.