• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை மாண்டெஸ் சூறாவளி!

Dez 8, 2022

இன்று அதிகாலை 02.30 மணிக்கு இறுதியாக செய்யப்பட்ட ஆய்வின்படி மாண்டெஸ் சூறாவளி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தகவல்களை முன்னாள் வானிலை அவதானிப்பு நிலைய அதிகாரி சூரியகுமாரன் வெளியிட்டுள்ளார்.

இந்த சூறாவளி கடந்த 03 மணித்தியாலங்களில் மணிக்கு 08km வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் (9.3N, 84.4E)மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியின் மையப் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் வேகமானது 60km/h-70km/h வரை வீசிக் கொண்டிருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் 09ஆம் திகதி நள்ளிரவு வேளையில் 65km/h – 75km/h வேகத்தில் வீசும் காற்றுடன் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரி ஹோத்தாவிற்கும் இடையே ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed